1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சி பேரணிக்கு எதிராக  கல்முனை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று காலை கல்முனை  நீதவான் நிதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளபட்ட வழக்கு விசாரணையில் பா.ம.உ ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்.

கல்முனை நீதவான் இல்லாத சமயத்தில் ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பானைகளை பெற்றிருக்கின்றார்கள் .

நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயாதிக்கங்கள் கிடையாது.

ஆகையினாலே அழைப்பானையினை பெற்ற சட்ட மாணவர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம்  ஒரு மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார் .

அந்த மனுவினை நான் ஆதரித்து இருந்தேன் இதன்காராணமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை இடை நிறுத்துமாறு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் .

அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் .

குறித்த தடையுத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் மூலம் கல்முனை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டதுடன் இன்று காலை தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த,

பாராளுமன்ற உறுப்பினர்களான,

கோ.கருணாகரம்

இரா.சாணக்கியன்

த.கலையரசன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான,

பா.அரியநேந்திரன்

சீ.யோகேஷ்வரன்                                                             

அ.நிதான்சன்

துணைச்செயலாளர்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி

செ.கணேஷ் தமிழ்மாணவர் மீட்பு அணி தலைவர் அடங்களாக ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.jpg

1.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி