1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சரியான திட்டமிடல் இல்லாததால் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயல்முறை பாரிய நெருக்கடியில் இருப்பதாக சுகாதார வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் அஸ்ட்ராசெனீகா தடுப்பூசியின் முதல் டோஸ் இலங்கையில் வழங்கப்பட்டபோது, ​​சுகாதாரத் துறை ஊழியர்கள், பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முன்னணியில் இருந்த அமைச்சர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அப்போதுதான் மேல் மாகாணத்தில் உள்ள பொது மக்களுக்கும் தடுப்பூசி கிடைத்தது.

அஸ்ட்ராசெனீகா தடுப்பூசிக்கு பற்றாக்குறை!

இருப்பினும், முதல் டோஸ் எடுத்தவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பதில் கடுமையான சிக்கல் உள்ளது. அதாவது, அஸ்ட்ராசெனீகா தடுப்பூசிக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலைமையின் தீவிரத்தன்மை மற்றும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, தடுப்பூசியின் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது இலங்கைக்கு கடினமாகிவிட்டது.

மேலும், அஸ்ட்ராசெனீகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸுக்கு மாற்று எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, முதல் டோஸ் பெற்றவர்களுக்கு அஸ்ட்ராசெனீகா தடுப்பூசியின் இரண்டாவது டோசை பெற்றுக்கொள்வது கடினம் என்றார்.

Lalith Vaccine

உலக சுகாதார அமைப்புக்கு (WHO) மட்டுமல்ல, இந்தியாவுக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கடினம் என்று தெரிவித்தார்.

இத்தகைய சூழலில்தான் அஸ்ட்ராசெனீகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அரசியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

விரும்பத்தகாத வேலை!

மிக சமீபத்திய சம்பவம் நேற்று பிரபலமான அரசாங்க அமைச்சர் ஒருவர் அவரது அலுவலகத்தில் தனது ஏராளமான நண்பர்களுக்கு அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோசை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்யப்படாத கிட்டத்தட்ட 100 பணக்கார பிரமுகர்கள் வெலிகடை சிற​ச்சாலைக்குள் நுழைந்து கைதிகளுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அரச சார்பு சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மே 5 மற்றும் 6 தேதிகளில் பிரமுகர்கள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்று இரகசியமாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ருக்ஷன் பெல்லன குற்றம் சாட்டியுள்ளார்.

 

நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற வெளி பிரமுகர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து தனியான விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளி பிரமுகர்களின் குழுவுக்கு தடுப்பூசி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், சிறைச்சாலை மருத்துவமனையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், விசாரணைக்கான ஆதாரங்களை தன்னால் முன்வைக்க முடியும் என்றும் கூறினார். 

ஏழைகளை துண்டித்து வி.ஐ.பி வரிசை!

இதற்கிடையில், கொழும்பில் தடுப்பூசிபோடும் நிகழ்வு நேற்று கொழும்பு நகரசபை மேயரின் இல்லத்தில் இடம் பெற்றதாக நாரஹேன்பிட ஸ்ரீ அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில்,

முன்னுரிமை பட்டியலில் இருந்தவர்களுக்கல்ல, தடுப்பூசி போடப்பட்ட பணக்கார நண்பர்களுக்கு என்று அவர் கூறுகிறார்.

கொழும்பு நகரசபைக்கான தடுப்பூசி திட்டம் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அவரது தாயின் விருப்பப்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேரர் கூறினார்.

நட்பு ரீதியாக இரண்டு தனியார் மருத்துவமனைகள்!

இதுபோன்ற பின்னணியில் தான், இரண்டாவது டோஸின் வழங்களை விரைவுபடுத்துவதற்காக நாட்டில் நன்கு அறியப்பட்ட அரசாங்கத்திற்கு விசுவாசமான இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகமும் ராஜபக்ஷ குடும்பத்துடன் நெருக்கமாக தொடர்புடையதாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்னவென்றால், இரு தனியார் மருத்துவமனைகளும் முன்னுரிமை பட்டியல்களை மீறியதாகவும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நிர்வாகிகளின் நண்பர்கள் குழுவிற்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கீழ் நீதிமன்ற நீதிபதிகள் சிக்கலில் இருக்கிறார்களா?

அதே நேரத்தில், நாட்டில் தடுப்பூசி திட்டம் தொடர்பான நெருக்கடி மேலும் பரவி நீதித்துறையிலும் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, ஆனால் உயர் நீதிமன்றம்,நீதவான் நீதிமன்ற ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

இராணுவ மருத்துவமனையில் தொடங்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கைகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும், இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது குடும்பத்தில் உள்ள 20 பேருக்கு இராணுவ மருத்துவமனை மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக அரசாங்க உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்திலுள்ள உயர் அதிகாரியின் மனைவி தனக்கு மட்டுமல்ல, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தடுப்பூசி ஏற்றிக் கொள்வது தொடர்பான சில அரச அதிகாரிகளின் நடவடிக்கை கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி