சீனாவின் டாலிக் பகுதியில், இன்று இரவு 7.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம், டாலிக்கு வடமேற்கே சுமார் 28 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.