1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாளை முதல் தமிழகத்தில் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று  நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் இதை தவிர்த்து பிற கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று 4,500- சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடை வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.  காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளது நோய் தொற்று  பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைகள், திறப்பு, பேருந்துகள் இயக்கம் போன்றவற்றால் இன்று தமிழகம் முழுவதும் பிரதான சாலைகள் வழக்கம் போல் பரபரப்பாக காணப்படுகிறது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி