1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குண்டொன்று இருப்பதாக போலியான தகவல்களை கொடுத்து, எச்சரித்து தனது நாட்டுக்கு மேலாக, உயரமான வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த  பயணிகள் விமானத்தை பலவந்தமாக தரையிறக்கி, அதிலிருந்த ஊடகவியலா​ளரை கைது செய்யும் நடவடிக்கையை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நேற்று (23) முன்னெடுத்திருந்தார்

பெலாரஸ் (வெள்ளை ரஷ்யா) முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பெலாரஸுக்கு ரஷ்யாவின் ஆதரவு இன்றும் உள்ளது, 1994 ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் 66 வயதான பெலாரஷ்ய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பராவார்.

கிரேக்கத்தின் ஏதென்ஸில் இருந்து லித்துவேனியாவுக்கு பெலாரஸ் மேலாக பறந்த பயணிகள் விமானத்தை  தனது நாட்டில் தரையிறங்கச் செய்து, அவ்விமானத்திலிருந்த 26 வயதான பெலாரஷ்ய பத்திரிகையாளர் ரோமன் புரோட்டோசெவிக் கைது செய்யப்பட்டார். அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் அழைக்கப்படுகிறார்.

புரோட்டாஷெவிச், ஒரு பெலாரசிய ஊடகவியலாளர் ஆவார், அவர் போலந்தில் உள்ள 'நெக்ஸ்டா' என்ற ஒன்லைன் ஊடகத்துடன் தொடர்புடையவர். அவர் ஒரு செய்தி ஆசிரியராகவும் இருக்கின்றார். 'டெலிகிராம்' அல்லது 'வாட்ஸ்அப்' போன்ற செய்தியிடல் சேவை மூலம் 'நெக்ஸ்ட்' செய்தி சேவை அவர்களின் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்கிறது. 'டெலிகிராம்' செய்தியை பெலாரஷ்ய அதிகாரிகளால் தணிக்கை செய்ய முடியவில்லை.

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் ஊழல் மோசடிகளை பெலாரஸ் மக்களுக்கும் உலகிற்கும் புரோட்டோசெவிக், அம்பலப்படுத்தினார்.   புரோட்டோசெவிச் தொடர்ந்து மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளானார். எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஆதரவுடன் புரோட்டோசெவிச் செயற்பட்டார். , அவரது வாழ்க்கை 2019 ல் ஆபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் புரோட்டோசெவிச் கிரேக்கத்தின் ஏதென்ஸுக்கு தப்பிச்சென்றார்.

நெக்ஸ்டா செய்தி சேவையை விட்டு வெளியேறிய புரோட்டசெவிச்,   பெலமோவா ஆன்லைன் செய்தி சேவையில் சேர்ந்தார். மேற்கத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிக்கோனோவ்ஸ்காவின் ஆதரவோடு 2020 இல் பெலாரஸ் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியது.

ஸ்வெட்லானாவுக்கு மக்கள் ஆணை இருக்கும் என்று நம்பப்பட்டாலும், அப்படி நடக்கவில்லை, லுகாஷென்கோ மீண்டும் அதிகாரத்தைப் பெற்றார். ஸ்வெட்லானா தலைமையிலான எதிர்க்கட்சி ஒரு சிறிய சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குழுக்களின் ஆதரவோடு, இது மோசடி செய்யப்பட்டதாக பெலாரஷிய எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. புரோட்டோசெவிக் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதாக சாட்சியமளித்தார், ஜனாதிபதி லுகாஷென்கோவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தார், ஜனாதிபதி தேர்தலின் முடிவை மறுத்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி