1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இன்று உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே சொல் ‘கொரோனா’. கண்ணுக்கு தெரியாத இந்த கிருமி மனிதர்கள் வாழ்க்கையில் கண்ணாமூச்சு ஆடி வருகிறது. உடலின் சுவாச பாதைக்குள் நுழைந்து, நுரையீரலை செயலிழக்க செய்து உயிரை பறிக்கிறது.

கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவத்தால், பெற்றோரை இழந்த நிறைய குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி இருக்கிறது. இந்தநிலையில் அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவ முன் வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்தநிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 23 வயதை அடைந்ததும் ரூ.10லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேந்திர வித்தியாலய பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் என்றும், புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் ரூ .5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு கிடைக்கும் என்றும் அதற்கான நிதி பிஎம் கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு - முதல்-அமைச்சர்  அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம்  வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும்.

பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி