1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அத்தியாவசிய சேவைக்காக செல்வோர் இன்று (01) முதல் கடுமையாக பரிசோதிக்கப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உண்மையிலும் அத்தியாவசிய சேவைக்காகவா பயணிக்கின்றனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தொழிலுக்கான அடையாள அட்டையுடன், நிறுவன தலைமை அதிகாரியின் கடிதமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

போலியான கடிதங்களை வைத்திருப்போருக்கும் அவ்வாறான கடிதங்களை விநியோகிப்போருக்கும் எதிராக போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படாது என அவர் கூறினார்.

எனினும் வைத்தியசாலைகளுக்கு செல்லவும் மருந்தகங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுகின்றமை குறித்து கண்காணிப்பதற்கு 23000 இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி