1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பானந்துரையிலிருந்து கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையிலான கடலோர மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மீன்பிடித் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பலில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் எரிந்துள்ள பகுதிகள் ஒன்றோடொன்று மோதக் கூடிய ஆபத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கப்பலை சுற்றியுள்ள கடல் பகுதியில் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக நீர் மாதிரிகளை பெற நாரா மாணவர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் செய்திகள் கூறுகின்றன

எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் எரியத் தொடங்கிய தினத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதால் மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தவிர மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும் செயற்படவில்லை. மீனவர்களுக்கு ரூ.5000 வழங்குவதாக சமீப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஆனால், பொதுவாக, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் ரூ.5000 கொடுப்பனவைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி