1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஆடம்பர வாகனங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படவில்லையெனவும், பரிவர்தனையின் தன்மைக்கேற்ப கோரப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய நேரிடுமெனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதாரம் பலவீனமடைந்துள்ள நிலையில், ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்ய பெரிய அளவில் அந்நியச் செலவானியை செலவு செய்யக் கூடாதென சமூக எதிர்ப்பு எழுந்தது. அத்தருணத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வாகன இறக்மதி பரிவர்தனை ஒப்பந்தத்தின்படி நடப்பதனால் அரசாங்கம் மாத்திரம் தனியாக அதிலிருந்து விலக முடியாதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார். இந்த ஒப்பந்தத்தில் அரச வங்கியொன்று தலையிட்டிருப்பதால் ஒப்பந்தத்தின்படி செயற்பட வங்கி கட்டுப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, இந்த பரிவர்தனை நிறுத்தப்பட்டதாக உண்மையை மறைத்து, அமைச்சர் பிரச்சாரம் செய்தது அரசியல் லாபத்திற்காகத் தான் என்பது இப்போது தெரிகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி