1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவிற்கும், பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்திற்குமிடையில் அரசாங்கம் மோதலை நிர்மாணித்துள்ளது. அதற்கு ஏமாற வேண்டாமென முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட நேற்று (13) ‘திவயின’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது கூறியுள்ளார்.

அவரது நேர்காணலின் சாராம்சம்,

சாகர காரியவசம் உதய கம்மன்பிலவிற்கும், உதய கம்மன்பில சாகர காரியவசத்திற்கும் பதிலிளித்துக் கொண்டாலும், எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களில் எவராவது பதிலளிக்கவில்லை.

சாகர காரியவசம் கூறுவதைப் போன்று கம்மன்பில தன்னிச்சையாக எரிபொருள் விலையை அதிகரித்திருந்தால், நகைச்சுவை அறிக்கைகளை வெளியிடாமல் எரிபொருள் விலையை குறைப்பதற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 70 டொலர். 2014ல்; 98 டொலராக இருந்தபோது கூட இந்நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 158 ரூபாய்க்கே விற்கப்பட்டது. மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 81 டொலராக இருந்த 2018ல், இலங்கையில் பெற்றோல் விலை ரூ.150க்கு விற்கப்பட்டது. மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 67 -68 டெலராக விற்கப்பட்ட காலத்தில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 137 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆகவே இரண்டு டொலரால் அதிகரிக்கப்பட்டதால் இத்தருணத்தில் பெற்றோல் ஒரு லீற்றர் 157 ரூபாவாக விலை நிர்ணயிக்க வேண்டியதில்லை.

மாத்திரமல்ல, உலகச் சந்தையில் மசகு எண்ணைய் விலை குறைக்கப்பட்ட காலத்தில் இந்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்காத அரசாங்கம், அப்போது அதிக லாபத்தை பெற்றுக் கொண்டது 2020 மார்ச் மாதம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 45 டொலராக இருந்தது. ஆனால் இலங்கையில் எரிபொருள் விலையில் ஒரு சதமாவது குறைக்கப்படவில்லை.

எஞ்சிய பணத்தைக் கொண்டு நிதியமொன்றை அமைத்து உலகச் சந்தையில் எரிபொருள் அதிகரித்தாலும் இந்நாட்டில் விலை அதிகரிக்கப்படாதிருக்க அதனை பயன்படுத்துவதாக அப்போதைய அரசாங்கம் கூறியது. ஆறு மாதத்தில் 200 பில்லியன் பணத்தை சேமிக்க முடியுமெனக் கூறிய அரசாங்கம், அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இலங்கையில் எரிபொருள் சம்பந்தமான ஒட்டுமொத்த செயற்பாட்டையும் அரசாங்கம் தனியார்மயமாக்க தயாராகி வருகிறது. சாகர காரியவசம், உதய கம்மன்பில போன்றவர்கள் உட்பட முழு அரசாங்கமும் என்ன செய்ய வேண்டுமென்றால், பொய் நாடகங்களை அரங்கேற்றாமல் மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், செயற்கை மோதல்களை உருவாக்கிக் காட்டுவது மக்களின் அறிவை கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.

பிரதமர் தலைமையிலான வாழ்கைச் செலவுகள் சம்பந்தமான துணைக்குழுவே எரிபொருள் விலை அதிரிப்பதற்குத் தீர்மானித்தது. இப்போது இதை இரு நபர்களின் மோதலாக தூக்கிப் பிடிக்க முயற்சிக்கிறார்ள். மக்களை முட்டாள்களென நினைத்து விட்டார்கள் போலும், எனவே, அதற்கு ஏமாறாமல், எரிபொருள் விலையை குறைப்பதற்காகப் போராட மக்கள் அணிதிரள வேண்டும்’. என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி