1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலக எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் உள்நாட்டு எரிபொருள் விலைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக எனக் கூறி 2020 ஏப்ரல் மாதம் நிறுவப்பட்ட எரிபொருள் விலையை உறுதிசெய்யும் நிதியத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றி கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதனால் கிடைக்கும் இலாபத்தை மக்களுக்கு வழங்காமல், எரிபொருள் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிதியம் நிறுவப்பட்டதாக 2020ல் நிதியம் நிறுவப்பட்ட போது அரசாங்கம் கூறியது.

the morning பத்திரிகை கூறுவதற்கேற்ப, இலங்கை மின்வலு சபை (இமிச) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (சிபிசி) செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், மேலும் ஒரு தொகை பணம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2020 மார்ச் 19ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை ஊடகச் சந்திப்பின்போது விளக்கமளித்த கலாநிதி பந்துல குணவர்தன, ‘உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தை கவனியாது ஒரு வருட காலத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவராதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாகக் கூறினார். அதன்படி, உள்நாட்டு எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யாமல் நடாத்திச் செல்வதற்காக இந்த நிதியம் நிறுவப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

எப்படியிருந்தாலும், நேற்று (13) எரிபொருள் விலை உறுதி செய்யும் நிதியம் சம்பந்தமாக பந்துல குணவர்தனவிடம் வினவிய போது அந்த நிதியம் “ ஏற்கனவே மாயமாகிவிட்டது” எனக் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி