1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள குறித்து தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையம் தொழில் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று பயணத்தடைக்கு மத்தியில் எவ்வித சுகாதாரப் பாதுகாப்பையும் கடைப்பிடிக்காமல் தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதன் ஊடாக அவர்கள் உயிராபத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்குத் தேவையான பொருளாதார வசதிகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மற்றும் தோட்டங்களை அண்டி வாழும் மக்களுக்கும் இல்லை என்பதால், அவர்கள் முகம் கொடுக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு துரிதமாக தடுப்பூசி வழங்கும் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமெனவும் இந்தக் கடித்தின் வாயிலாக தோட்டத் தொழிலாளர் மத்தியநிலையம் கேட்டுள்ளது.

தவிரவும், நோய் தொற்றிய தொழிலாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள கட்டுப்பாட்டுச் சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ள நாளொன்றிற்கான அடிப்படை சம்பளம் ரூ.1000வை பல்வேறு காரணங்களை காட்டி குறைத்தமை உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்து வந்த சிறப்புரிமைகள் மறுக்கப்பட்டமை ஆகியன குறித்து பேசுவதற்காக தமது சங்கத்திற்கு கலந்துரையாடலொன்றை பெற்றுத் தருமாறும் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி