1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பயணக் கட்டுப்பாட்டை சில நாட்களுக்கு நீக்குவதால் எப்ரல் மாதத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலை உருவாகக் கூடுமென இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனவே, தற்போத அமுலிலுள்ள  பயணக் கட்டுப்பாடை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதை நீக்குவதனால் கொவிட் 19 நிலைமை தீவிரமடைந்து இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமெனவும் மருத்துவர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

நாட்டில் நாளொன்றிற்கு 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள்  கண்டறியப்படுவதாகவும், சுமார் 50 இறப்புகள் நடப்பதாகவும் இந்த நிலைமை தொடர்ந்தும் அதிகரித்து  கொவிட் வைரஸின் டெல்டா வகை   கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேற்படி கடிதத்தில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி