1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்றைய பதவி ஏற்பின்  பின்னர் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

செல்வந்தர்களுக்கு சலுகைக் கொடுத்து, ஏழைகளுக்கு பசியைக் கொடுத்தது அரசாங்கம்!

செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை கொடுத்து, ஏழைகளுக்கு பசியை இந்த அரசாங்கம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்க, சபையில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், நாடு இராணுவமயப்படுத்தலை நோக்கி நகர்வதாகவும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Sri Lanka 2

தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,

உரம், எரிபொருள், கல்வி ஆகிய பிரச்சினைகள் இன்று பெருமளவில் தலைதூக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால்,  அரசாங்கம் மட்டுமல்ல நாடாளுமன்றமும் இல்லாமல் போகும். கொவிட் தான் இதற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. எனினும், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை.

கொவிட் தடுப்பு விசேட படைப் பிரிவு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இப்படி முன்நோக்கி செல்ல முடியாது. எமது அரசியலமைப்பின் ஊடாக அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் இதற்கு பொறுப்பு இருக்கிறது. பிரதமரும் இருக்கிறார். அமைச்சர்களும் இருக்கின்றனர். பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும். உங்களுக்கு பிழைத்தால், நாடாளுமன்றத்தில் அதனை நாம் சுட்டிக்காட்டுவோம். ஆனால் ஒரு திணைக்களத்தின் தலைவர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவருக்கு இருக்கும் தகுதி என்ன?. இராணுவத் தளபதியால் இதனை செய்ய முடியாது. எனவே பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும். இராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது. இது பிழையானது.

முதலீட்டுச் சபை மாநாட்டில் இராணுவத் தளபதி உரையாற்றுகிறார். இதனால் வந்த முதலீட்டாளர்களும் சென்றிருப்பார்கள். இது பிழையான முன்னுதாரணம். இராணுவத் தளபதியும் அவரும் எனது நண்பர். நானும் அவருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் இதனை இராணுவமயப்படுத்த முடியாது. இதனை சரிசெய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு விவாதம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நேரம் ஒதுக்கித் தர வேண்டும். என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ரணில் என்று கருதலாமோ ??

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி