1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அமைந்திருக்கும் வடக்கு காரோ மலைப்பகுதிகளில், இன்று அதிகாலை 2.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று அதிகாலை 4.57 மணிக்கு ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவானது. இந்த இரு நில அதிர்வுகளும் குறைந்த தீவிரத்தை கொண்டிருந்ததால், மேகாலயா மற்றும் லடாக் பகுதிகளில் நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி