1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க வாகன அணிவகுப்பு இப்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்துள்ளது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் வீதி மறியலில் ஈடுபட்டதால் காலி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் கடவத்தை, பன்னிப்பிட்டிய, வெலிசர, கண்டி மற்றும் மொரட்டுவயில் தங்களது சம்பள பிரச்சனைக்கு உடனடி தீர்வு கோரி வாகன அணிவகுப்பை தொடங்கின.

நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வெலிசர நவலோக மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட வாகன அணிவகுப்பு ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது.

கடவத்த, பன்னிப்பிட்டிய மற்றும் மொரட்டுவையில் ஆரம்பித்த ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி செயலகத்தை அன்மித்துள்ளன.

இதேவேளை, மொரட்டுவயில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வாகன அணிவகுப்புக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மொரட்டுவ பொலிஸார் இன்று (4) மொரட்டுவ மேலதிக நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், மொரட்டுவ மேலதிக நீதவான் உத்தலா சுவஹந்துருகொட தடை உத்தரவை நிராகரித்ததோடு, நாடு முழுவதும் திறந்திருக்கும் தருணத்தில் கொவிட்  தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், அமைதியான போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி