1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

43 வீதமாக இருந்த எமது உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் நிரந்தரமான விவசாயக் கலாசாரத்தைத் தேற்றுவிக்க வேண்டும். நிலைபேறான விவசாய உற்பத்தியில் முன்நோக்கிச் செல்வதற்கான ஆரம்பத்தில் தற்போது நிற்கின்றோம். நாங்கள் எங்களிடமிருந்து மறைந்த விவசாயக் கலாச்சாரத்தை மீளக் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற “செழுமையான கிழக்கு நிலைபேறான விவசாயக் கலாச்சாரம்” என்னும் தொனிப்பொருளிலான உள்ளுராட்சி மன்றங்களின் மூலம் சேதனப் பசளை உற்பத்தியினை மேம்படுத்தல் செயற்திட்டம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த உலகில் மூன்றாம் உலக யுத்தம் நிகழுமாக இருந்தால் அதற்குக் காரணம் காலநிலை மாற்றமாகவே இருக்கும். இரசாயண உரங்களைப் பயன்படுத்தி நிலத்தையும், வளிமண்டலத்தையும் மாசுபடுத்தி காலநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளோம். எதிர்கால பிள்ளைகளைப் பற்றி சிந்திக்காமல் இத்தனை ஆண்டு காலம் அவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்துள்ளோம்

43 வீதமாக இருந்த உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் நிரந்தரமான விவசாயக் கலாசாரத்தைத் தேற்றுவிக்க வேண்டும். நாங்கள் பின்நேக்கிச் செல்லவில்லை நிலைபேறான விவசாய உற்பத்தியில் முன்நோக்கிச் செல்வதற்கான ஆரம்பத்தில் நிற்கின்றோம். நாங்கள் ஒரேடியாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இரசாயணத்தில் விடுபடுவதற்காக நீண்ட கால திட்டங்களை உலகம் வகுத்து வருகின்றது. ஆனால் நாங்கள் எங்களிடம் இருந்த, எங்களிடமிருந்து மறைந்த விவசாயக் கலாச்சாரத்தை மீளக் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

எமக்கு பாரிய வளமாக வனங்கள் இருக்கின்றன வனங்களையும் பாதுகாத்துக் கொண்டு விவசயத்தையும் வென்றெடுக்கும் திட்டங்களைச் செய்து வருகின்றோம். பொருளாதார ரீதியான திருப்தியோடு மன ரீதியான திருப்தியையும் ஏற்படுத்தும் விதத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கால்நடைகளை முறையான பராமரிப்பின் மூலம் அத்தியாவசியமான இயற்கை உரம் மற்றும் உயிரியல் வாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்ளலம். இருக்கும் சொத்துக்களில் இருந்து பயனைப் பெறுவதற்கான புத்தியைப் பெற்றிருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் சுமார் 07 இலட்சத்திற்கும் மேல் கால்நடைகள் இருக்கின்றன. ஆனால் துரதிஸ்டவசமாக நூற்றுக்கு ஐந்து வீதம் தான் அவற்றிலிருந்து சாணக் கழிவினைப் பெறக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான நிலைமகளை மாற்றி வளத்தை முறையான பயன்படுத்தி பயனைப் பெற வேண்டும். இதற்காக விவசாய வனம், வீட்டுத்தோட்டம், நிலையான பால்பண்ணை போன்ற வடிவங்களிலான திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறான செயற்திட்டங்களுக்கு அரசியலாளர்களுக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. வாக்களிப்பிற்காக மாத்திரம் மக்களைப் பயன்படுத்தாமல் இவ்வாறான விவசாய நடவடிக்கைகளுக்கான ஊக்குவிப்புகளையும் செய்ய வேண்டும்.

கழிவுகளின் மூலம் உரம் தயாரிக்கும் போது இரசாயணம் அற்ற இவ் உரம் மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறும். இதன் மூலம் அவ் உரத்திற்கு அதிக தேவைப்பாடும் எழும். இதனால் தான் உள்ளுராட்சி சபைகள் இவ்விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற செயற்திடடத்தை உருவாக்கியுள்ளோம். ஏனெனில் கழிவுகள் அதிகம சேகரிக்கும் பிரிவாக இவை காணப்படுகின்றன. எனவே இவற்றின் மூலம் சேதனைப் பசளை உற்பத்தியினை மேற்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்

நாங்கள் இனம் மதம் கலாச்சாரம் ரீதியில் வேறுபட்டிருந்தாலும். எம் அனைவருக்கும் ஒரு பொதுப் புண்ணியமாக இருப்பது இந்த நிலம். மக்களாகிய நாங்கள் இந்த பூமியை செழிப்பாக ஆக்குவது எங்கள் ஒவ்வொருவரின் கடமை. மனிதன் என்ற அடிப்படையில் நாம் முரண்படாமல்

இந்த மண்ணில் பிறந்த மக்கள் என்ற அடிப்படியில் இந்த மண்ணை வளமாக்கி உலகத்தில் முன்மாதிரியான நாடாக எமது நாட்டை மற்ற வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி