1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வைத்தியர்கள் அவரது தந்தைக்கு கொரோனா தொற்றுக்காக டொசிலிசுமா என்ற மருந்தை எடுத்துக்கொள்ளும்​படி அறிவுறுத்தினார்கள், ஆனால் மருந்தை வாங்க ரோஹான் ஜயசிங்கவால் முடியவில்லை. அதனால் அவரது தந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அவரது தநதையும் ஒரு பிரபல மருத்துவராவார்.

இறந்தவர் சதீஷ் ஜயசிங்க, என்ற பிரபல மருத்துவர்.

 

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, 'டொசிலிசுமா' என்ற மருந்து நாட்டில் இருப்பதாகக் கூறினாலும், அந்த மருந்தை எங்கும் வாங்க முடியவில்லை என்று ரோஹன் ஜயசிங்க கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தில் இந்த மருந்து (டொசிலிசுமா) பற்றாக்குறையை முதலில் சுட்டிக்காட்டினார்.

40 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் இல்லை!

கொரோனா வைரஸ் மற்றும் கொவிட் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டொசிலிசுமா தடுப்பூசியின் பற்றாக்குறையால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் 'மவ்பிம' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாததால், மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமப்படுகின்றனர். தடுப்பூசியை எந்த அரச மருத்துவமனையிலும் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், தனியார் நிறுவனத்தில் கூட தடுப்பூசி வாங்குவது மிகவும் கடினமாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் முக்கிய மருத்துவமனைகளில் இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 40 க்கும் மேற்பட்ட பிற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொ​விட் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் டொசிலிசுமாவின் அளவு, நோயாளியின் தேவையைப் பொறுத்து மாறுபடும், மேலும் சில நோயாளிகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.

அந்த தடுப்பூசி இல்லாதது மிகவும் சிக்கலானது, இது கொவிட் நிமோனியா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்புகளை மேலும் இல்லாமல் செய்கிறது

40 வகையான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருந்துகள் ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான  காசோலைகள் எழுதப்பட்டுள்ளதாகவும் தேவையான நிதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் நோயாளிகளின் வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற தன்மை தவிர்க்க முடியாதது. இத்தகைய தொற்றுநோய் காலத்தில் இது மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்பது இரகசியமல்ல.

சம்பந்தப்பட்ட ஒப்பந்த கடிதங்களுக்கான காசோலைகளை ஒப்படைப்பது அரச மருந்தாக்க கூட்டுத்தாபணத்தின் தலைவர் தலைமையிலான குழுவால் செய்யப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

பிரிவு தலைவர்கள் அல்லது பொது மேலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளில் அவர்கள் இருந்தாலும், காசோலைகள் அதன் தலைவரால்தான் ஒப்புதல் அழிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் விசாரித்த போது, ​​தற்போது பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் 40 க்கும் மேற்பட்ட மருந்துகளின் பற்றாக்குறை நிலவுவதாக கூறினார்.

இதோ அரச மருத்துவமனைகளில் இல்லாத 40 வகையான மருந்துகள் 

1. Clindamycin phosphate Inj.300mg/2ml
 
2. Chloramphenicol Capsule 250mg
 
3. Chloramphenicol Inj.500mg
 
4. Norfloxacin Tablet 400mg
 
5. Itraconazole Caps 100mg
 
6. Sodium Nitroprusside Injection 50mg
 
7. Sodium Nitroprusside Injection
 
8. Phenoxybenzamine HCI Injection 100mg/2ml
 
9. Ephedrine Injection 30mg/1ml
 
10. Oxybutynine Hydrocloride Tablets 5mg
 
11. Lorazepam Injection 4mg in 1ml
 
12. Chloral Hydrate Oral Solution 500mg/5ml in 200ml bottle
 
13. Zuclopenthixol Inj.200mg/ml
 
14. Paracetamol Suppository 500mg
 
15. Melatonin Tablet 2mg
 
16. Alprazolam Tablet 0.5mg
 
17. Aripiprazole Tablet 10mg
 
18. Midazolam Nasal Spary 0.5mg/md,50 dose
 
19. Thiamine Tablet 100mg
 
20. Phytomenadione Tablets 5mg
 
21. Phosphate Tablet 500mg
 
22. Cholecalciferol Capsule/Tablet 1000 IU
 
23. Total Parenteral Nutrition in 500ml-1,500ml Collapsible Bag
 
24. Montelukast Sodium Tablets 10mg
 
25. Pneumococcal Vaccine single dose vial
 
26. Propylthiouracil Tablet 50mg
 
27. Testosterone Undecanoate Injection 250mg/1ml,4ml
 
28. White Soft Paraffin
 
29. Cytarabine Injection 100mg/5ml vial
 
30. Folinic Acid Tablet 15mg
 
31. Asparaginase 10,000 Unit Injection
 
32. Procarbazine Capsule 50mg
 
33. Azathioprine Tablet 50mg
 
34. Tacrolimus Capsule 0.5mg
 
35. Tamsulosin Capsule 0.4mg
 
36. Allopurinol Tablet 100mg
 
37. Atracurium Besylate Injection 25mg/2.5ml
 
38. Lidocaine Spray 10%, 50ml bottle
 
39. Methionine Tablet 500mg
 
40. Pralidoxime Chloride Injection 1g/20ml
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி