1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்காலத்தில் நாடு நீண்ட காலமாக மூடப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைவரும் அதிக தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழு இலங்கை மக்களுக்கும் தெரிவிக்கிறார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முக்கியமான தருணத்தில், நாட்டில் உள்ள அனைவரும் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே, கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

சுகாதாரத் துறை கஷ்ட்டமான நிலையில் இருந்தாலும், ஒரு அரசாங்கமாக நாங்கள் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் சம்பளத்தை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது என்று ஜனாதிபதி கூறினார்.

நாடு முழுவதுமாக மூடப்படுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இன்று இரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாட்டை மூட முடிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் பதிவான பெரும்பாலான கொவிட் இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், எனவே நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது விரைவான உடற்பரிசோதனை நடத்துமாறு சுகாதாரத் துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் மருத்துவ நிபுணர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே ஒரே தீர்வு என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இதன் காரணமாக, சமீபத்தில் இலங்கைக்கு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் தான் விசேட அக்கறை காட்டியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், தடுப்பூசிகளைப் பெறுவதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சு மற்றும் அவரது ஊழியர்களின் மூலம் மற்ற நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அந்த முயற்சியின் விளைவாக, தற்போது ஒவ்வொரு மாதமும் தேவையான எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இலங்கை பெற்று வருகிறது என்றும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கை முதலில் இந்தியாவில் அஸ்ட்ரா செனிகா மற்றும் இரண்டாவதாக சீனாவில் சய்னோஃபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார், ஆனால் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு ஒரு மாதம் தாமதமானது.

எவ்வாறாயினும், சய்னோஃபார்ம் தடுப்பூசி மே 08 முதல் தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசியும், ஜப்பானில் இருந்து அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியும், ரஷ்யாவிடம் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசியும் கிடைக்கப்பெற்றுள்ளதால், உலகின் தலைசிறந்த தடுப்பூசி செலுத்தும் நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதியின் விசேட உரை பின்வருமாறு.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி