1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மங்கள சமரவீரவை பலரும் விரும்பினர். ஆனால் ஒருசிலர் அவரை விரும்பவில்லை. அவரது தாராளவாத பார்வையில் உடன்படாத பலர் இருந்தனர் ஆனால் அவர்களை மிரட்டாமல் உரையாடலை ஏற்றுக்கொண்டனர். அவர் தனது உலகக்கண்ணோட்டத்தை ஆணையிட பிரபலமான கோரிக்கைகளைஅனுமதித்தவர்அல்ல. மாறாக, சமூக விதிமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவர் கேள்விஎழுப்பினார்.

மங்களஉண்மையாகவே, அர்த்தத்தில் ஒருசீர்திருத்தவாதி. அரசாங்கத்திற்கு அப்பாற்பட்ட நிறுவனங்களை கட்டியெழுப்பவும்,இலங்கையில் மக்கள் கௌரவமான வாழ்க்கை வாழ உதவுவதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்தார்.

மங்கள அச்சுறுத்தல்கள் அல்லது அவரது பதவி நிலைமூலம் அல்ல ஆனால் பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆளுமை செய்தார். அவர் நிபுணர்களைக்கேட்டு,அவருடைய தீர்ப்புக்கு எதிரான அவர்களின் ஆலோசனையை மதிப்பீடு செய்து தனது முடிவை எடுத்தவராவார். அவர் எப்பொழுதும் தான் எடுத்த முடிவுகளின் உரிமையை தன்னகத்தே கொண்டார். மற்றும் காலப்போக்கில் அதன் விளைவுகளையும் பிரதிபலித்தார்.மங்கள தனது 30 ஆண்டுகால நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல அழிக்க முடியாத சாதனைகளை படைத்துள்ளார்.

இலங்கை தொலைத்தொடர்பு துறையின் தாராளமயமாக்கல் மங்களவின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்..இன்று, இலங்கையில் உள்ள அனைத்து அரசுடைமை நிறுவனங்களிலும் SLT மிகவும்இலாபகரமானதாகும்1990 களில் மங்கள அதை நவீனப்படுத்த தலைமைதாங்கியதோடு, தொழிற்சங்கங்களுடன்இணைந்துபணியாற்றவும், புதியதொழில்நுட்பங்களைக் கொண்டுவரவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைஅழைக்கவும் வழிசெய்தார்.

2017 - 2019 வரை நிதி அமைச்சில் மங்களவுடன் நெருக்கமாக பணியாற்றிய பெருமை எனக்கு இருக்கின்றது. இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சுப்பதவி இருக்கும் போது பலர் ஊழல்செய்யமுடியும்.மங்கள திறைசேரியை மீண்டும் கட்டவும், நிதி அமைச்சரின் அதிகாரத்தையும் விருப்பத்தையும் குறைக்கவும் வாய்ப்பைப்பயன்படுத்தினார்.

வரி அடிப்படையை விரிவாக்க உள்நாட்டுவருமானவரிசட்டம் 2017 ஐ நாங்கள் நிறைவேற்றினோம். பணம் சம்பாதிப்பவர்கள் தங்கள் நியாயமான வரிகளை அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டும் என்ற கருத்தை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம்.ஆனால் மறுபுறம், ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு நியாயமாக தங்கள் தொழிலைச் செய்வதற்கான தடைகளைக்குறைக்க நாங்கள் வேலைசெய்தோம்.

சாதனைகளில் ஒன்று 2017 மற்றும் 2018 இல் அடைந்த முதன்மைநிலுவைமிகையாகும். இவ்மிகை - 1954 மற்றும் 1955 களின் மீழ்நிகழ்வுகள் ஆவதோடு சர்வதேச முதலீட்டாளர்களிடையே எங்கள் நம்பகத்தன்மையை அதிகரித்ததோடு இலங்கை கடன்வாங்குவதற்கான செலவையும் குறைத்தது.நாட்டில் பெட்ரோலிய நுகர்வுமக்களுக்கு வெளிப்படையான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்தியது மற்றொரு மைல்கல்ஆகும்.

மத்திய வங்கியுடனான எங்கள் தொடர்பு வலுவானது, விவாதத்திற்குரியது மற்றும் தொழில் முறைசார்ந்ததாக இருந்தது.மத்திய வங்கியின் சுதந்திரத்தை மங்கள எப்போதுமே மதிக்கிறார் என்பதற்கு அப்போதைய ஆளுநர் கலாநிதி இந்திரஜித்குமாரசாமி, செயலாளர் டாக்டர் சமரதுங்க மற்றும் மூத்த மத்தியவங்கி அதிகாரிகள்சான்றளித்தனர். மங்களபிரபலமல்யமானது அல்லாத ஆனால் சிறந்த பாரிய பொருளாதார ஆலோசனையிலிருந்து பின்வாங்கவில்லை. மிகுந்த உள்வலிமை கொண்டமனிதன்.

இலங்கையின்அரசியல் சூழலை சீர்திருத்த மங்கள போராடினார். 1994, 2005 மற்றும் 2015 ல் ஆட்சியைமாற்றியதில் அவரது பங்குகுறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிவில் சமூகம் மற்றும் அரசியல்சக்திகளுக்கு இடையே நம்பிக்கையையும் நட்பையும் வளர்க்கும்தனித்துவமான திறனை மங்கள கொண்டிருந்தார்.

கொழும்பை அழகுபடுத்துவதற்கான ஆரம்பமுயற்சிகளுக்குமங்கள தலைமைதாங்கினார். ஒருநாள், நானும் மங்களவும் காலி முகத்திடல் வழியாகச் செல்லும்போது, ​​அவரின் கீழ் இருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடப்பட்ட பனை மரங்கள் வேரோடு பிடுங்கப்படுவதைக் கண்டார்.மங்கள என்பக்கம்திரும்பி, காலி முகத்திடல் சூரிய ஒளிபடும் பகுதி என்பதால் அவர்கள் பனை வளர்ப்பைத் தேர்ந்தெடுத்ததாகக்கூறினார்.

பனைமரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் அடையாளமாகையால் அதுமாற்றப்படுவதற்காக மரங்கள் அகற்றப்படுவதாக இருக்கலாம் எனஅவர்சுட்டிக்காட்டினார்.. "நாங்கள் பிராந்திய ஒருமைப்பாடு பற்றி பேசுகிறோம், நாங்கள்ஒரு நாடு பற்றிபேசுகிறோம். எவ்வாறாயினும், எங்கள் நாட்டின் வடக்கை நாங்கள் இன்னும் கடுமையாக நிராகரிக்கிறோம்.மங்கள எப்பொழுதும் ஐக்கிய இலங்கைக்கு ஆதரவாக இருந்தார். இன, சாதி, மதவேறுபாடின்றி, மக்கள்அமைதியுடனும், கௌரவத்துடனும் வாழக்கூடிய நாட்டை உருவாக்க அவர் முயன்றார்.

ஒளியியல் அல்லது அமானுஷ்யத்தின் அடிப்படையில்  அல்லாமல் சான்றுகள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையிலும் முடிவுகளைஎடுக்க அவர் தூண்டப்பட்டார்.

மங்களவுடனான எனது உறவு ஒரு தொழில்முறை உறவாகத்தொடங்கியது ஆனால் காலப் போக்கில் அது இலங்கையைப் பற்றிய நமதுப கிரப்பட்டபார்வையின் அடிப்படையில் ஒருசிறந்த நட்பாக வளர்ந்தது. மங்கள பாராளுமன்றத்தை விட்டு வெளியேறியவுடன், அவருடைய பொல்கொட ஏரிவீட்டில் எங்கள் நட்பும் உரையாடலும் தொடர்ந்தது. அவர் தனது முயற்சிகள் மற்றும் அவரதுஎதிர்காலம் பற்றி எனக்குவிளக்கினார். அவரது பொழுதுபோக்கிற்காக அவர்விரும்பிய திறந்தவீடு, மகிழ்ச்சியான இயல்பை தெளிவாக எடுத்து இயம்பியது.

மங்கள நேர்மையானவர் அனைவரையும் மதிக்கக்கூடிய,மற்றும் நவீனகாலத்தின்மிகவும் தைரியமான அரசியல்வாதி. மங்கள உங்கள் நோக்கு இழக்கப்படவில்லை எனினும் உங்கள் நேரடிநடத்தை, உங்கள் நட்பை இழந்திடுவோம் உங்கள் அரசியல் பயணத்தில் நீங்கள் பலருக்கு அளித்துள்ள தைரியம் இலங்கையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தும்.

இரான் விக்ரமரத்ன

முன்னால் நிதி இராஜாங்க அமைச்சர்

25.08.2021

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி