பிரிமா கம்பனியால் விநியோகிக்கப்படும் 1 கிலோ கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு சம்பந்தமாக பாவனையாளர் அதிகார சபையிடம் அனுமதி பெற்படவில்லை என்பது தெரிகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மாவிற்கு 18 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டதோடு, பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. இதன் படி பானின் விலையும் 10 ரூபாய் உயர்ந்தது.