1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அத்தியாவசிய பொருட்களின் விலையை திட்டமிட்டு அதிகரிக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விலையையும் விட கூடுதல் விலைக்கு விற்கும் நபர்கள் மற்றும் நிறவனங்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்காக, பாவனையாளர்; விவகார திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதலாவது வாசிப்பிற்கு விடப்படவுள்ளதாக பாவனையாளர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறுகிறார்.

பாவனையாளர் விவகார திருத்தச் சட்டமூலத்தின்படி தனி நபர்கள் அல்லது தனி நபர் வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், தனி நபர் வியாபாரத்திற்கு ஆகக் கூடிய அபராதமாக ரூ.20,000லிருந்து 10 லட்சம் வரையிலும், நிறுவனங்களுக்கு ஆகக் கூடிய அபராதமாக 2 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை அதிகரிக்கப்ட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

தனி நபர்களுக்கு விதிக்கப்படும் ரூ. 1000 அபராதத் தொகை ஒரு லட்சமாகவும், தனி நபர் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.10,000லிருந்து 5 லட்சம் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி