1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மீதான பொலிஸாரின் இடையூறுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு அரசியல் கட்சியொன்று தனது கருத்தை மக்களிடன் எடுத்துச் செல்லவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் சட்ட ரீதியான தடைகள் கிடையாது. முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராயும் போது ஜனநாயகம் சம்பந்தமாக பாரதூரமான நிலை ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு தேர்தல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

முன்னிலை சோஷலிஸக் கட்சி ஒகஸ்ட் 16ம் திகதி ஆணையத்திடம் எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாடு சம்பந்தமாக பொலிஸ் மாஅதிபருக்கு செப்டம்பர் 3ம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில் இது சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஒரு நபர்; நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறி செயற்பட்டிருந்தால், அது சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்டத்தின் ஒதுக்கீடுகளின் பிரகாரம் செயற்படும் பொறுப்பு பொலிஸ{க்கு உண்டு. என்றாலும், அப்படி செயற்படும்போது, சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு செயற்பட வேண்டும் என்பதுடன், சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு பொலிஸூக்கோ, அரச அதிகாரிக்கோ உரிமை இல்லை எனவும் வலுக்கட்டாயம் அல்லது அச்சுறுத்தல் செய்தல் அல்லது சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யதலோ கூடாது’ என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மு.சோ.க. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தை பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக துரிதமாக விசாரணை செய்து சட்டத்திற்குப் புறம்பான சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அப்படியான சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தமாக தகுதியான நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளருக்காக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எம்.எச.டீ.டி. ஹேரத் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி