1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை வழக்கில் இருந்த விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதாவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று நிராகரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சந்தர்ப்பத்தில் சந்தேக நபரை வழக்கில் இருந்து விடுவிக்க நீதவான் நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் கொழும்பு பிரதான நீதவான் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் குற்றவியல் விசாரணை திணைக்களம் தமது தரப்பு வாதிக்கு எதிராக குற்றம் சுமத்தினாலும் அவருக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லை என்பதால், அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில் தனது முடிவை அறிவித்து, இன்று வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதவான், சட்டத்தரணியின் கோரிக்கை நிராகரித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி