1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் யார் அனுமதி வழங்கியது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

“நாட்டைத் திறக்க ஒரு நிமிடம் இருக்கும் போது மதுக்கடை நிரம்பினால், அதைத் தாண்டி நாம் எங்கு செல்கிறோம் என்பதை இருமுறை யோசிக்க வேண்டும்” என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகள் திறப்பது குறித்து தவறான செய்தி பரவியுள்ளது. என் கருத்துப்படி, கொவிட் தடுப்புக் குழுவோ அல்லது அரசாங்கமோ அத்தகைய தீர்மானத்தை எடுக்கவில்லை.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப கொரோனா தொற்றைக் குறைக்கும் நோக்கில் தான் கொவிட் குழு தீர்மானம் எடுக்கும்.

மதுக்கடையைத் திறப்பது குறித்து கொவிட் குழு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. எவ்வளவு தான் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தாலும் கூலி வேலை இல்லை என்று சொன்னாலும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், மதுக்கடைகளைத் திறந்ததும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி