1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கனடா நாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும் அவரது தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் ஊடகங்கள் கணித்துள்ளன.

வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும் இது.

நாடாளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் ஆயுள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும்.

கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி