1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலி என்ற மாணவியின் மரணம் சம்பந்தமான பொறுப்பை குடியகல்வு குடிவரவுத் துறை ஏற்க வேண்டுமெ அவரின் சகோதரிகள் வலியுறுத்துகின்றனர்.

33 வயதான விஸ்மா சந்தமாலிக்கு நீதி கேட்டு ஜப்பானுக்கு சென்றுள்ள அவரது சகோதரிகளான வயோமி மற்றும் பூர்ணிமா ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். விஸ்மாவின் மரணம் சம்பந்தமாக ஜப்பானின் நீதி அமைச்சர் யோகா கமிகாவா சந்தமாலியின் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையிலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தமாலி என்ற மாணவி மார்ச் மாதம் இறப்பதற்கு முன்பு, ஜப்பானின் குடிவரவு குடியகல்வு துறைக்குச் சொந்தமான தடுப்பு முகாமில் இருக்கும் போது நோய்வாயப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்க அதிகாரிகள் தவறியமையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக எமக்குக் கிடைத்த தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

இதற்கமைய, இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக ஜப்பானுக்குச் சென்ற விஸ்மா சந்தமாலியின் விசா காலாவதியாகிய காரணத்தினால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே நோயினால் மரணித்துள்ளார்.

இது சம்பந்தமாக நீதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜப்பானுக்குச் சென்ற விஸ்மாவின் சகோதரிகள் இருவருக்கும் விஸ்மா தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை முழுமையாக பார்ப்பதற்கு வாய்ப்பளிக்காமல், தொகுக்கப்பட்ட ஒரு பகுதியை மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

அதனை வழக்குரைஞர்களிடம் காட்டுவதற்குக் கூட அதிகாரி அனுமதியளிக்காததால், இந்த மரணம் சம்பந்தமாக ஜப்பானின் குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை வெளிப்படுவதாகவும் விஸ்மாவின் சகோதரிகள் கூறுகின்றனர்.

தமது சகோதரியின் மரணம் சம்பந்தமாக தமக்கும், சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்குரைஞர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்திக்கொள்வதற்காக பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள முழுவதையும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென ஜப்பான் அதிகாரிகளை இவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இது விடயத்தில் இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவராலயம் போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லையெனத் தெரியவருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி