1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ் மாவீரர்களின் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, பலவந்தமாக மக்களை கைது செய்யும் அரசாங்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாக சர்வதேசத்திற்கு  உறுதியளித்துள்ளது.


”ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான சூழ்நிலைகளுக்கும் சவால்களுக்கும் தென்னாபிரிக்காவின் எழுச்சியூட்டும் தேசிய அனுபவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் பக்க நிகழ்வாக நியூயோர்க்கில் உள்ள தென்னாபிரிக்காவின் நிரந்தரத் தூதரகத்தில் வைத்து தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பண்டோரை, ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 15 முதல் 26 வரை தமிழர்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்த நிலையில், கடந்த 34 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த திலீபன் என்ற இராசையா பார்த்திபனின் நினைவு வாரத்தில், மட்டக்களப்பில் நினைவேந்தலுக்கு தடை விதித்து, மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மூன்று பேர் கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபன் நினைவுச் சின்னத்திற்கு அருகில் விளக்கு ஏற்றும்போது நீதிமன்ற உத்தரவைக் காண்பிக்காமல் காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அதே நாளில் பிணையில் விடுவிக்கப்பட்டாடு, இந்த வழக்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட காணாமல்போனோர் சங்கம் மரியசுரேஷ் ஈஸ்வரி உள்ளிட்ட 25 பேருக்கு, நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

"நல்லிணக்கம் மற்றும் உண்மை ஆகிய துறைகளிலான தனித்துவமான தென்னாபிரிக்காவின்  வரலாற்றை இலங்கை உன்னிப்பாகக் கவனித்ததாகவும், அவற்றின் பல அம்சங்கள் தென்னாபிரிக்காவின் சொந்தத் தேசிய அனுபவத்திற்கு குறிப்பிடத்தக்கவையாகும் என்றும் குறிப்பிட்ட இலங்கை, இந்த அனுபவத்தின் சில அம்சங்களை ஸ்ரீலங்கா கவனமாகப் பிரதிபலிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பண்டோரிடம் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடு அலுவலகம், மோதலுக்குப் பிந்தைய அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் பங்களிப்புக் குறித்து அமைச்சர் பீரிஸ் தென்னாபிரிக்க வெளிநாட்டு அமைச்சருக்கு விளக்கினார்.

தனது அனுபவங்களையும், பாடங்களையும் மோதலுக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தென்னாபிரிக்கா மகிழ்ச்சியடைவதாகவும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும்  இழப்பீடு, பொது மன்னிப்பு மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்கள் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் பண்டோர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு அஹ்மத் ஆகியோர் நியுயோர்க்கில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் அண்மையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் மக்களுடனான உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி