1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பந்தமாக வெளிநாட்டு மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறைப்பாடு நவம்பர் 02ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

2009 ஜனவரி 8ம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சம்பந்தமாக இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லையென்பதால், Free Press Ltd, எல்லையற்ற நிருபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ)    மேலும் பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள் சம்பந்தமாகவும் சான்றுகளை முன்வைத்து அவர்களின் படுகொலைகளை விசாரிப்பதற்கு மக்கள் நீதி மன்றமொன்றை கூட்டுமாறும் கோரியிருந்தன.

இதன்படி, லசந்தவைத் தவிர மெக்ஸிகோ மற்றும் சிரியாவில் ஊடகவியலாளர்களான மிகெல் எஞ்சல் லோபேஸ் வெலஸ்கோ மற்றும் நபில் அல்-ஷர்பானி ஆகியவர்களின் படுகொலை சம்பந்தமான முறைப்பாடுகளும் விசாரிக்கப்படவுள்ளன. நெதர்லாந்தின் ஹேக் நகரில் கூடும் இந்த நீதிமன்றத்தில் நவம்பர் 02ம் திகதி காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவுள்ளன.

வெளிப்படையான வழக்கு விசாரணைகளுக்கு பிரபலமான மனித உரிமை வழக்கறிஞர் அல்முதென பர்னபியு என்பவரால் முறைப்பாடு முன்வைக்கப்படும். ஊடக சுதந்திரம் சம்பந்தமான உயர் மட்ட வழுக்குரைஞர்கள் சபையின் உறுப்பினர்களான ஷாஸ் பரொனஸ் ஹெல்னா கெனடி பிரதான உரையை ஆற்றவுள்ளார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்த நிலையிலும், இலங்கையில் எந்தவொரு சட்ட வல்லுநராலோ, நீதிமன்ற செயற்பாட்டினாலோ அந்த படுகொலையை செய்த கொலையாளிகளை வெளிக்கொணர முடியவில்லை. என்றாலும், லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாத்திரமல்ல, பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்த குற்றத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந் 13 படை வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தகைய பின்னணியில் இலங்கையில் நிலவிய அநியாயக்காரர்களின் ஆட்சியில் நடந்த ஊடகவியலாளரின் கொலை சம்பந்தமாக மாத்திரம் ஹேக் மக்கள் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி