1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு, சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜெர்மனி) மற்றும் ஜோர்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, இன்று (05) அறிவிக்கப்பட்டது.

பூமியின் காலநிலை மாதிரியின் பௌதிக மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலை நம்பத்தகுந்ததாக கணித்தல் மற்றும் சிக்கலான அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான அற்புதமான பங்களிப்புகளுக்காக  சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசில்மேன் ஆகியோருக்கு பாதி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை பௌதிக அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்தமைக்காக ஜோர்ஜியோ பாரிசிக்கு அடுத்த பாதி பரிசு பகிரப்பட்டுள்ளது.

உலக அளவில் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் நேற்று (04) முதல் அறிவிக்கப்படுகிறது.

நேற்றையதினம் மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இரசாயனவியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகளும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ளன.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வே நாட்டில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி