1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது. எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாள்கைக்கு இணைக்கப்பட்டது.

கடந்த மாதம் நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, புறப்பட்ட குறித்த கப்பல், இன்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளதுடன், தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி