1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது பாடசாலைக்கு வரும் பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடையோ அல்லது வேறு வசதியான. இலகுவான மற்றும் பொருத்தமான உடை மற்றும் காலணி அணிந்து வர முடியுமென கல்வி அமைச்சு கூறுகிறது.

ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் பாடசாலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கி இருந்தமையால் உடல் பருமனோடு ஒப்பிடும் போது சீருடைகள், மற்றும் காலணிகளை பயன்படுத்த முடியாத நிலையை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.

பெருந்தொற்று நிலைமை மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைக்கேற்ப புதிய உடைகள் மற்றும் காலணிகளை விலைக்கு வாங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் உள்ளமையால், இது விடயத்தில் கவனம் செலுத்தி தீர்மானம் எடுத்ததாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (பாடசாலை நடவடிக்கைகள) எல்.எம்.டீ. தர்மசேன ‘லங்காதீப” பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பமாகும் இன்றைய தினத்தலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரை இந்தத் தீர்மானம் செயற்படுமெனவும், இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

என்றாலும், பாடசாலை சீருடைகள் இந்நாட்டு பாடசாலைகளில் பயனீட்டுக்கு வந்த நிலைமைகளோடு ஒப்பிட்டு, மீண்டும் பாடசாலைகளை ஆரம்பித்ததன் பின்னர் மாணவ மாணவிகள் பாடசாலைக்கு வரும்போது தகுதியான உடைகளை தயாரித்துக் கொள்ளும் பிரச்சினை சம்பந்தமாக கல்வி அமைச்சும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி