1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் இறையாண்மையுடன் விளையாட எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

உரக்கப்பல் தொடர்பான பரிந்துரைகளை வழங்கிய தாவர தனிமைப்படுத்தல் பிரிவின் அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் ஒதுக்கி வைத்துவிட்டு தரமற்ற உரத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த கால தேசபக்தி, தேசப்பற்றுள்ள அனைத்து இறைமையும் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும்  நாட்டின் இறையாண்மையை பன்னாட்டு நிறுவனம் அபகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சுவாசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி