1200 x 80 DMirror

1200 x 80 DMirror

தனியார் துறை ஊழியர்களின் சேவையை நிறைவு செய்தல், ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து விடுவிப்பதை தாமதப்படுத்தல் மற்றும உழைப்புச் சுரண்டலை நீடிக்க சட்டத் திருத்தமொன்று ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 வரை நீடிப்பது சம்பந்தமான சட்ட வரைவிற்கு தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனை குழுவின் அனுமதி நேற்று (09) கிடைத்துள்ளதோடு, நாளை (11) அது விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்ப்பில் தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் தலைமையில் கூடியது. இந்த சட்டமூலத்தைப் போன்றே, ஒவ்வொரு தொழிலாளியினதும் தொழிலை நிறைவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட வரைவிற்கும் ஆலோசனைக் குழுவின் அனுமதி இதன்போது கிடைத்துள்ளது.

இதுவரை தனியார் துறையில பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆகக் குறைந்த வயதெல்லை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுடன், பெரும்பாலும் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதாயின் அதற்கு தொழில் வழங்குநர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருசாராருக்கும் மத்தியில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை இந்த சட்டத்தின் மூலம் 60 வயது வரை நீடிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை குழு கூட்டதில் ராஜாங்க அமைச்சர் பிரயங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான டப்.டீ.ஜே. செனவிரத்த, வடிவேல் சுரேஷ், அசோக பிரியன்த மற்றும் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், ஜே.வி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் கலந்து கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி