1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மண்ணெண்ணெய் விற்பனை மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றிற்கு ரூ.23 மில்லியன் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

ஏற்கனவே, மண்ணெண்ணெய் ஒரு லீற்றலில் ரூ.33.00 நட்டமேற்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நாளொன்றிற்கு சுமார் 500 தொன் விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய அமைச்சர் மண்ணெண்ணெய் தட்டுப்பாடுக்கு காரணம் தீடீரென ஏற்பட்ட அதிக கேள்வி தானெனவும் கூறினார்.

நகர்புற வறிய மக்கள் பெரும்பாலும் மண்ணெண்ணெய் அடுப்புகளையே பயன்படுத்துகின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமைதான் இதற்குக் காரணம். சிறு அளவிலான மீனவர்கள் தமது படகுகளுக்கும் மண்ணெண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.

கடந்த காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் போது அவற்றை விற்பதால் பெரிய நட்டம் ஏற்படுவதாக அரசாங்கமும், நிறுவனங்களும் கூறின. இறுதியில் நட்டத்தை சரி செய்வதற்காக என்று கூறி பொருட்களின் விலையை அதிகரித்தன. அதே போன்று அரசாங்கமும் மண்ணெண்ணெய் விலையை அதிகரித்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி