1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கலாநிதி ஜகத் பாலசூரிய கடந்த ஒக்டோபர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

வயோதிபம் மற்றும் உடல் நலத்தை கருத்திற்கொண்டு ஏறக்குறைய ஒரு வருட சேவையை நிறைவு செய்த நிலையில் கலாநிதி ஜகத் பாலசூரிய தானாக முன்வந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த இடைவெளியை நிரப்ப அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்றும் கலாநிதி ஜகத் பாலசூரிய ஆணைக்குழுவின் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

கலாநிதி ஜகத் பாலசூரிய இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக 2020 டிசம்பர் 10 அன்று கோட்டாபய  ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.

கலாநிதி எம்.எச். நிமல் கருணாசிறி, கலாநிதி விஜித நாநாயக்க, அனுஷ்யா சண்முகநாதன், எச்.கே. நவரத்ன வெரதுவ ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக தொடர்ந்தும் சேவையாற்றி வருகின்றார்.

Jagath Balasuriya

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி