1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வங்கி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிதி அமைச்சு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வுக்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்து நிதியமைச்சிடம் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அது வழங்கப்படவில்லை என அரச வங்கி ஊழியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் 25,000 ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று [16] பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கி நிர்வாகம் 2021-2023 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிதி அமைச்சகம் அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினையை தள்ளிப்போடுவதை ஊக்குவிப்பதாக,"தெரிவித்தார்.

சம்பள உயர்வுக்கு பயன்படுத்தப்படும் பணம் அரச வங்கிகளால் பயன்படுத்தப்படுவதால், அமைச்சகம் பண நெருக்கடியை எதிர்கொள்ளாது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இல்லாத காரணத்தினால் வங்கி ஊழியர் சங்கங்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பதவி உயர்வு, சம்பளம் உள்ளிட்ட சேவை விதிமுறைகள் உட்பட நிதி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட மூன்று வருட கூட்டு ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படாமைக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBU) அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கின் ஐந்து முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி