1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

தக்காளி விலை கிலோ ரூ.100-ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளிச்சந்தையில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை கடைகளில் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்ய நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும். 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் அனைத்து காய்கறிகளுடன் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி