1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததனால் ஏற்பட் விபத்துக்கள் குறித்து சமீபத்தில் செய்திகள் வந்தன. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு நிரப்பப்படும்போது அதன் கலவையில் மாற்றம் செய்வதுதான் என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இலங்கை வெப்ப மண்டல நாடு என்பதால் வாயுவின் கலவையில் குறைந்த சதவீத புரோபேன் மற்றும் அதிக சதவீத பியுட்டேன் இருத்தல் வேண்டும். இதில் 80 வீத பியுட்டேன் மற்றும் 20 வீத புரோபேன் இருத்தல் வேண்டும். ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களில் கலவை 50க்கு 50க மாற்றப்பட்டுள்ளதென இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

எந்த அனுமதியுமின்றி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாவனையாளர் சேவைகள் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன கூறுகையில், இது சம்பந்தமாக வர்த்தக அமைச்சர் பந்துள குணவர்தன அவர்களுக்கும், பாவனையார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அவர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறினார்.

என்றாலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் துஷான் குணவர்தன கூறியுள்ளார்;. இதுவரை எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் சில நடந்துள்ளதாகவும், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமமான நிலை ஏற்படுமெனவும் சமீபத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி