1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையைத் நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது. இதன்மூலம் கடந்த 400 ஆண்டுகளாக பிரிட்டனோடு இருக்கும் உடன்பாடு முடிவுக்கு வருகிறது.

இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரே நாட்டின் தலைவராக இருப்பார்.

பார்படோஸ் நாட்டின் நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்டு 55 ஆண்டுகளுக்குப் பிறகு, 1625ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தோடு பார்படோஸை இணைத்து வைத்திருந்த எல்லா உடன்படிக்கைகளிலிருந்தும் கிட்டத்தட்ட தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள இருக்கிறது பார்படோஸ்.

கடந்த 30 ஆண்டுகளில், அரசி இரண்டாம் எலிசபெத்தை நாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கும் முதல் நாடு பார்படோஸ்தான். கடைசியாக 1992ஆம் ஆண்டு மொரீஷியஸ் நாடு, தன் நாட்டின் தலைவர் பதவியிலிருந்து மகாராணி எலிசபெத்தை நீக்கியது.

இப்போதும் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா போன்ற 15 நாடுகள் அரசி இரண்டாம் எலிசபெத்தை தங்கள் நாட்டின் ராணியாகக் கருதி மதித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலா துறையை அதிகம் நம்பியிருக்கும் இந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது என ஏ.எஃப்.பி மற்றும் ராய்டர்ஸ் முகமைகளில் செய்தி வெளியாகியுள்ளது. காரணம், பிரிட்டனில் இருந்துதான் இந்நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து போகின்றனர்.

பிரிட்டனின் அரசி இரண்டாம் எலிசபெத்தான் தற்போது பார்படோஸ் நாட்டின் தலைவராக (ஹெட் ஆஃப் ஸ்டேட்) பதவியில் உள்ளார். அவரது பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் சாண்ட்ரோ மசோன் இருக்கிறார்.

நாட்டின் தலைவர் என்று பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசியை நீக்குவது குறித்து கடந்த ஆண்டிலேயே பார்படாஸ் அறிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து நாட்டின் முதல் அதிபர் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது.

சாண்ட்ரோ மசோன்

சாண்ட்ரோ மசோன்

இந்தத் தேர்தலில் சாண்ட்ரோ மசோன் வெற்றி பெற்றார். வரும் வாரத்தில், மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பதிலாக, அவர் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

வரும் 30-ஆம் தேதி நடக்கும் விழாவில் சாண்ட்ரோ மசோன் பார்படோஸ் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் அந்நாட்டின் ராணுவ அணிவகுப்புகளும் அடக்கம்.

இந்த நிகழ்ச்சியில், இளவரசர் சார்லஸ் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

சுமார் 2.85 லட்சம் பேரைக் கொண்ட சிறிய தீவு நாடான பார்படோஸ், 1834ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு அடிமை முறையை எதிர்கொண்டு வந்தது. 1966ஆம் ஆண்டு தான் முழுமையாக சுதந்திரமடைந்தது.

பார்படோஸ் பிரதமர் மியா மொட்டெலி

பார்படோஸ் பிரதமர் மியா மொட்டெலி

பார்படோஸ் நாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய போது அங்கு மக்கள் அதிகம் வசிக்கவில்லை. புகையிலை, பருத்தி, இண்டிகோ, சர்க்கரை பயிரிட நிலம் பயன்படுத்தப்பட்டது. வெகு சில தசாப்தங்களில் பார்படோஸ் ஆங்கிலேயர்களின் முதல் லாபகரமான அடிமை சமூகங்களைக் கொண்ட பிராந்தியமானது.

1627 முதல் 1833 வரையிலான ஆண்டுகளுக்கு மத்தியில், ஆறு லட்சம் ஆப்பிரிக்க அடிமைகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் சர்க்கரை பயிரிடும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

1838ஆம் ஆண்டு வரை அடிமைமுறை இருந்தது. 1966ஆம் ஆண்டு தான் பார்படோஸ் முழுமையாக சுதந்திரம் பெற்றது.

நவம்பர் 29, திங்கட்கிழமை மாலை,பிரிட்ஜ் டவுனில் உள்ள நேஷனல் ஹீரோஸ் ஸ்கொயர் பகுதியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில், பார்படோஸ் குடியரசு நாடாக அறிவிக்கப்படும் என ராய்டர்ஸ் முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

"எங்கள் காலனி ஆதிக்க வரலாற்றை முழுமையாக கைவிடும் நேரம் வந்துவிட்டது" என பார்படோஸ் நாட்டின் பிரதமர் மியா மொட்டெலி கடந்த 2020ஆம் ஆண்டு ஓர் உரையில் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி