1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிலிண்டர் வலுவாக இருந்தாலும் வாயு கலவை மாறினால் வாயு வெளியேறலாம் என இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய ஆய்வு பொறியாளர் நிமல் டி சில்வா கூறுகிறார்.

எனவே, கேஸ் சிலிண்டரை வாங்கிய பிறகு, வீட்டுக்குள் எடுத்துச் செல்வதற்கு முன், கசிவு உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது நல்லது என்கிறார் அவர்.

சிலிண்டரிலிருந்தே கேஸ் கசிந்தால், வால்வில்தான் கோளாறு என்றும், வால்வில் உள்ள கேஸ் கசிவுக்குக் காரணம் சிலிண்டரில் உள்ள உள் அழுத்தமே என்றும், கலவை மாறினால்தான் அழுத்தம் மாறும் என்றும் பொறியாளர் கூறினார்.

எரிவாயு சிலிண்டரின் வால்வில் சிறிது சவர்க்கார நுரை தடவி கசிவு உள்ளதா என சரிபார்க்கலாம் என நிமல் டி சில்வா தெரிவித்தார்.

இந்த உண்மைகளை புறக்கணிப்பது உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும், என்றார்.

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

image 916b5ca83f

“இப்போது வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டர் வாங்கி வந்ததும் அதில் சவர்க்கார நுரையை பயன்படுத்தி கசிவு இருக்கிறதா என்று பாருங்கள் கசிவு இருந்தால் வீட்டுக்குள் நுழையாதீர்கள்.வாங்கிய இடத்திற்கு திருப்பிகொடுத்துவிடுங்கள் பிறகு ரெகுலேட்டரை மாற்றி நல்லதொரு ரெகுலேட்டரை பயன்படுத்துவதுடன் குழாய் இணைப்பையும் சரி பார்க்கவும், ஏனெனில் அதை நிராகரித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்." என இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய ஆய்வு பொறியாளர் நிமல் டி சில்வா தெரிவித்தார்.

"எரிவாயு பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை தேவை" - அமைச்சர் விதுரர்

இதேவேளை, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு எரிவாயு பாவனையாளர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான சர்ச்சையை தீர்க்க மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், இதுவரையில் அவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படாதமையே இந்த நிலைக்கு காரணம் எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை:

இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்திய காஸ் சிலிண்டர்கள் வெடித்தமைக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களால் வாயு கசிவு காரணமாக சமீபத்திய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

இலங்கையில் 30% புரொப்பேன் மற்றும் 70% பியூட்டேன் இருந்த LP எரிவாயு சிலிண்டரின் கலவை 50% புரொப்பேன் மற்றும் 50% பியூட்டேன் என மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் இரண்டும் எரிவாயுவின் கலவையில் எந்த மாற்றமும் இல்லை என்று வலியுறுத்துகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி