‘ஒமிக்ரோன்” புதிய வைரஸ் திரிபு பரவக் கூடிய ஆபத்து இருக்கும் நிலையில் உலக எரிபொருள் விலை 10 வீதத்தினால் சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் பின்பு உலக எரிபொருள் விலை ஒரே நாளில் அதிக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகுமெனவும் கூறப்படுகிறது.
இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (26) மாலையில் பிரன்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 72.72 டொலராக சரிந்துள்ளது. அதற்கு முன்தினம் அதாவது வியாழக்கிழமை(25) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 82.82 டொலராக காணப்பட்டது.