1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

5வது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாடு அபுதாபியில் டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பாலகிருஷ்ணன் உட்பட பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் 'சுற்றுச்சூழல், பொருளாதாரம், தொற்றுநோய்'.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து மாநாட்டில் மேலும் விவாதிக்கப்படும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பெருங்கடல் மன்றத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன், 2016 முதல் 2019 வரை அப்பதவியை வகித்துள்ளார். அவர் டிசம்பர் 5-ம் திகதி உச்சிமாநாட்டில் உரையாற்ற உள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி