1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனவரிக்குள், நாட்டின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு 140 மில்லியன் டொலர் மீதமாக இருக்கும் என சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால் செலவழிக்கக்கூடிய பணத்தின் அளவு மைனஸ் 437 மில்லியன் டொலராக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பெப்ரவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் செலுத்த வேண்டிய கடன் தொகை 4,843 மில்லியன் டொலர் எனவும், ஆனால் இம்மாத இறுதியில் அது 140 மில்லியன் டொலர் எனவும், மீதம் மைனஸ் 4,700 மில்லியன் டொலர் எனவும் அவர் கூறினார்.

அதாவது, நாடு திவாலாகிவிடும், என்றார்.

''கறுப்புச் சந்தையை முறியடிக்க டொலருக்கு உண்மையான மதிப்பைக் கொடுங்கள்''

இதேவேளை, நேற்றிரவு (08) ஒளிபரப்பான 'நெத் எப் எம் அன்லிமிடெட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சரியான முறையில் வெளிநாட்டு நாணயங்களை நாட்டிற்கு கொண்டு வருவது பற்றி மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்து நடைமுறையில் இல்லை.

கறுப்புச் சந்தையில் ஒரு டொலருக்கு சுமார் 240 ரூபா விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள பின்னணியில் மத்திய வங்கியினால் டொலரின் பெறுமதியை 200 ரூபாவாக பேணுவது மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி