1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இலங்கைக்கு சுத்திகரிப்புக்காக ஓடர் செய்யப்பட்ட கச்சா எண்ணெய் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுவாக கச்சா எண்ணெயை ஓடர் செய்து இறக்குமதி செய்ய 90 நாட்கள் ஆகும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியால் கச்சா எண்ணெய் ஓடர் தாமதமாகியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது ஓடர் செய்யப்பட்டுள்ள கச்சா எண்ணெய் ஜனவரி 25ம் திகதிக்குள் நாட்டுக்கு வந்து சேரும்.

இந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கச்சா எண்ணெய் இலங்கைக்கு வரும் வரை சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் இருப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான கடன் பத்திரங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்லும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இருப்பினும், தற்போது சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்யை போன்றே மேலும் இரண்டு கச்சா எண்ணெய்களுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தால் மூட வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 420 மில்லியன் டொலரை திரட்ட முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

இந்தத் தொகையை வழங்குமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூபாவை சம்பாதிக்க முடியும் டொலரை அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர், இந்த நிலை காரணமாக எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் வழங்கும் கூப்பன் அமைப்பு!

இதேவேளை, குறைந்த வருமானம் பெறுவோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கூப்பன் அடிப்படையில் வழங்குமாறும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அரசாங்கம் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது மக்களும் சில சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களின் விரக்தியைப் போக்க அவர்களுக்குத் தேவையான நம்பிக்கையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கூப்பன் முறையில் வழங்க நாங்கள் முன்மொழிகிறோம். மற்றும் எரிபொருள் பயன்பாடு கூப்பன் அடிப்படையில் வழங்குவதை செயல்படுத்தவும். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க ஒரு வழியைக் கண்டறியவும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி