1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எனது அரசாங்கத்தில் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ,உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஊடக நிறுவனமொன்றின் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கூட்டுப்பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக பதவியிலிருந்து விலகி அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்ததென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடந்த பிரேமதாச அரசாங்கத்தின் காலத்திலும் கூட்டுப் பொறுப்பு மீறிய லலித் அத்துலத்முதலி மற்றும் ஜி.எம் பிரேமச்சந்திர ஆகிய அமைச்சர்களுக்கு எதிராக நீதிபதி மார்க் பெர்னாண்டோ அமைச்சர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

கூட்டுப் பொறுப்பை மீறிய அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளின் தலைவர்களை உடனடியாக நீக்குமாறு கோரி பசில் ராஜபக்ச சார்பு சமூக ஊடக வலையமைப்புகள் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதுடன், பல ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் இந்த நடவடிக்கையில் இணைத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி