1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை 5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஐந்தாவது மாடியில் உள்ள கழிவறையின் ஜன்னலில் இருந்து குதித்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச முதியன்சாலாகே அப்சரா மெனிகே ராஜபக்ஷ என்ற 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர் பன்னிபிட்டிய சேடகல நாமல் உயனை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவு 01 இன் காவலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

60 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கும் சங்கம் அமைத்து வங்கிகளில் கடன் பெற்று மீண்டும் அந்த கடன் சங்கத்தின் மூலம் கடன் வழங்கி இந்த மோசடி நடந்துள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

சிஐடி வரலாற்றில் பெண் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை.

நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்ட தொடம்பே முதலாளி!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் வரலாற்றில் முதல் கரும்புள்ளியாக 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி ஏ.வி.ரத்னபுரி கைது செய்யப்பட்டார். நான்காவது மாடியில் இருந்து பொடிஅப்புஹாமி கீழே விழுந்து இறந்தார்.

தொடம்பே முதலாலி என அழைக்கப்படும் இவர் 1966 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு இராணுவ சதிப்புரட்சியின் சந்தேக நபராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த மரணம் தற்கொலை என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் 4 வது மாடியில் இருந்து தள்ளப்பட்டதாக மாற்றுக் கருத்துக்கள் வெளிவந்தன. இன்றும் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்த செய்தி குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

அந்த மரணத்துடன் சமூகத்தில் 4 வது மாடி பற்றி பரபரப்பான விவாதம் ஏற்பட்டுள்ளதுடன் 4 வது மாடி குறித்து சமூகத்தில் அச்ச நிலையொன்று உருவாகியுள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த பலர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி