1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எந்த அரசியல் கட்சிக்கும் முட்டுக்கொடுக்காத தனியான அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் இது புதிய இடதுசாரி அரசியல் அமைப்பாக செயற்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின்(JVP) ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் கலாநிதி உவிந்து விஜேவீர (Uvindu Wijeweera) தெரிவித்துள்ளார்.

கண்டியில் அஸ்கிரிய விகாரையின் பிரதி ஆவண காப்பாளர் நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

தான் ஆரம்பிக்கும் அரசியல் அமைப்பு சுயாதீன அமைப்பு எனவும் எந்த அரசியல் கட்சிகளுடனும் தானும் தனது உறுப்பினர்களும் சம்பந்தப்பட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் இணங்கக் கூடிய, நாட்டைகட்டியெழுப்பும் தேசிய சிந்தனையை தொனிப் பொருளாக கொண்டதாக புதிய கட்சி இருக்கும். தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்த பின்னர் பொது மக்கள் இணைய கூடியதான பெயர், நிறத்துடன் அரசியல் கட்சியை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் உவிந்து விஜேவீர குறிப்பிட்டுள்ளார்.

உவிந்து விஜேவீரவின் தந்தை ரோஹன விஜேவீர(Rohana Wijeweera), இலங்கையில் இடதுசாரி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் இரண்டு ஆயுத கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். எனினும் அவை தோல்வியில் முடிந்தன.

இந்த கிளர்ச்சிகள் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் இறுதியில் விஜேவீர உட்பட ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து 90 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சியில் உயிர் தப்பிய சோமவன்ச அமரசிங்க (Somavansa Amarasinghe)உட்பட மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களால் மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் கட்டியெழுப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி