1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

34 வருடங்களுக்கு முன்னர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எதிர்த்த தமிழ்த் தலைவர்கள் தற்போது இந்தியாவின் தேவைக்கு அதனை நடைமுறைப்படுத்தக் கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகளை நிறுவி, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தது.

“34 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஆர். சம்பந்தன் அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்தார். 13வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்று ராஜீவ் காந்திக்கு. ஆர்.சம்பந்தன், TNA தலைவர் சிற்றம்பலம், அமிர்தலிங்கம், கடிதம் எழுதினர். அன்று நிறுத்த நினைத்ததை இன்று ஏற்பதற்கு காரணம் என்ன என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

வவுனியாவில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

34 வருடங்களுக்கு முன்னர் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தைஇ தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அமுல்படுத்துமாறு கோருவது நியாயமானதல்ல என கஜேந்திரகுமார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினார். அதுதான் இப்போது வந்திருக்கிறது. இதனை அறிந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 11 வருடங்களாக மக்களுக்கு விளக்கமளித்தோம். இப்போது அது வெளிப்படையாக நடக்கிறது. இதனை நாம் எதிர்க்கிறோம். 13வது திருத்தச் சட்டம் ஒற்றையாட்சிக்குள் செயற்படும் ஒன்று” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியின் சின்னமான சிங்கக்கொடி இலங்கையின் சுதந்திர தினம் என அனைத்து சிங்கள பௌத்த ஆதிக்கங்களையும் நிராகரித்து போராடிய தமிழ் மக்களின் தேசிய அரசியலை மாற்றியமைக்கும் முயற்சி என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒற்றையாட்சியில் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக தெற்கில் ஆயுதமேந்திய போராட்டத்திய நடத்திய போது, தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கத்தின் கூட்டாளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  தலைவராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை இராணுவத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளராகவும் இருந்தனர். இவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் முன்னின்று செயற்பட்டனர்.' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி