1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாளுக்கு நாள் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முடக்கம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இந்த சுய விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வெளிமாவட்ட தொழிலாளர்களை ஊர்களுக்கு திரும்பி அனுப்புமாறு நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு பிரதேசத்தில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தனிபட்ட நிகழ்வுகள், வைபவங்கள் இரத்துச் செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அவதானமாக நடந்துகொள்ளாத பட்சத்தில் மீண்டும் முடக்கம் வருவதைத் தவிர்க்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி